ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட , 25 உலக விருதுகளை பெற்ற திரைப்படம். இயக்கம் : மீரா நாயர் இந்தி , ஆங்கில சப் டைட்டில்களுடன். அஷ்வின் மருத்துவமனை கலையரங்கம் , கணபதி , கோவை 5 08 2007 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு.
கோணங்கள், கோவை திரைப்பட ஆர்வலர்களால் துவக்கப்பட்ட திரைப்பட சங்கம். ஞாயிற்றுக் கிழமைகளில் நல்ல திரைப்படங்களைத் திரையிடுகிறோம். இரு மாதங்களுக்கு ஒரு முறை உலகின் சிறந்த ஒரு இயக்குனரின் படைப்புகளை முழு நாள் திரைப்பட விழாவாகத் திரையிடுகிறோம். கல்விக்கூடங்களுக்குச் சென்று சிறந்த திரைப்படங்களை திரையிடுகிறோம்.
ஆண்டு சந்தா - தனி நபருக்கு ரூ.300 , குடும்ப சந்தா ரூ.500 , மாணவர்க்கு ரூ150. மேலும் விவரங்களுக்கு - 94430 39630 Email : konangal@gmail.com
நல்ல சினிமா என்பது நல்ல புத்தகம் போல என்பது என் கருத்து. நல்ல படங்களைப் பார்த்துதான் படம் சம்பந்தப்பட்ட என் அறிவை வளர்த்துக் கொண்டேன். எனது அறிவு புத்தகங்கள் படித்து வந்தது இல்லை. ஷேக்ஸ்பியரையும் , சார்லஸ் டிக்கன்ஸையும், ஆஸ்கர் வைல்டையும், டென்னசி வில்லியம்சையும், ஆர்தர் மில்லரையும் நான் படங்கள் வழியேதான் பயின்றேன். ஏனென்றால் எனது இளமைக்காலம் படங்களின் யுகமாக இருந்தது. ஆனால் தமிழ் சினிமா அன்றும் இன்றும் அதே கீழ் நிலையிலேயே இருக்கிறது. நமது சரித்திரப் பெருமையையோ, நமது மண்ணின் கலாசாரப் பெருமையையோ அவை எடுத்துச் சொல்ல முன்வந்ததில்லை. அதைப்பற்றி நமது தமிழ் சினிமா ஏதாவது பேசியிருக்குமேயானாலும் அவை வெற்றுப் பம்மாத்துக்களாகவே இருக்கின்றன. " - ஜெயகாந்தன்
ரித்விக் கட்டக் 1925 ஆம் ஆண்டு டாக்காவில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். 1947 இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பம் புலம் பெயர்ந்து இந்தியாவில், குடியேறியது. புலம் பெயர்தலின் வேதனையும் , அவலமும் கட்டக்கின் திரைக் காவியங்களில் பிரதிபலிப்பதைக் காணலாம். இந்திய மக்கள் நாடக் சஙகத்தில் 1948 இல் சேர்ந்தார். 1956 இல் முழு நேர திரைப்பட இயக்குநரானர். 1976 பிப்ரவரி 6 ஆம் நாள் தம் மரணம் வரை இயக்குநராக பணியாற்றினார். கட்டக் பூனே திரைப்படக் கல்லூரியிலும் பணியாற்றினார். இவரின் மாணவர்களுள் மணி கவுல், குமார் ஸஹானி, கேதன் மெஹ்தா, ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் இந்திய நவீன சினிமாவில் முத்திரை பதித்தவர்களாவர்.
ரித்விக் கட்டக் திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களை அளித்து உதவிய டாக்டர். குணதிலகராஜ் (கோவை விவசாய பல்கலைகழகம்) அவர்களுக்கு கோணங்களின் மனமுவந்த நன்றி.
No comments:
Post a Comment