(இடம் : கஸ்தூரி சீனிவாஸன் அரங்கம் . பீளமேடு , கோவை. மற்ற விவரங்களை இந்த அறிவிப்பின் இறுதியில் காணலாம். )
ரித்விக் கட்டக்
1925 – 1976
இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை இந்திய சினிமாவின் மிக வும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால் அது ரித்விக் கட்டக்காகத்தான் இருக்க முடியும்.அதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்திய கலைஞர்களி லேயே மிகவும் புரிந்துகொள்ள முடியாத வருமாக விளங்கியவரும் ரித்விக் கட்டக்தான். சிலரின் பார்வையில் ரித்விக் கட்டக் ஒரு வினோத மேதை. ஆனால் அவர்கள் பார்க்கத் தவறுவது, கீழ்மட்ட ஏழை மக்களின் மீது அவருக்கிருந்த அன்பும் , அக்கறையும் ஆழமான நேசமுமாகும். இன்னும் சிலரின் பார்வையில் அவர் சோகம் மற்றும் நாடகத்தின் வல்லுநன். ஆனால் இவர்கள் தெரிந்து கொள்ளாதது அவரின் ஒவ்வொரு ஷாட்டின் பின்னாலும் உள்ள அன்னியமும் ஆழமுமான ஒழுங்கு முறையும் ஆகும். கட்டக் மிகவும் அடக்கமானவர். அதனால்தானோ என்னவோ ஒரு திரைப்பட இயக்குநர் என்ற முறையில் தன்னையோ , தன் படங்களையோ ஒருபோதும் விற்கமுடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக அவரின் மறைவுக்குப் பின்பாவது , இப்போது அவர் படைப்புகள் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. உலகமெங்குமுள்ள ரசிகர்கள் எத்தகைய ஒரு இந்திய சினிமா மேதையை அவரின் சொந்த வாழ்நாளின் போது இழந்துவிட்டோம் என்பதை உணர்கின்றனர். ஆனால் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அவர், அவருக்கு மிகவும் பிடித்த அவரின் படத்தலைப்பு போல ' மேக டாக்க தாரா' வாக - மேகம் கவிந்த தாரகையாக - இருந்துவிட்டார்.
( நன்றி : சென்னை பிலிம் சொசைட்டி வெளியிட்ட 'ரித்விக் கட்டக்' நூலின் முன்னுரையில் இயக்குநரும் , ரித்விக் கட்டக்கின் மாணவருமான ஹரிஹரன் )
கட்டக் திரைப்பட விழாவில் அவரது புகழ்பெற்ற மூன்று திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
மேக டாக்க தாரா ( 1960)
படம் வங்க மொழியில் - ஆங்கில ச்ப் டைட்டில்களுடன் - ஓடும் நேரம் : 120 நிமிடங்கள்.
கோமல் கந்தார் (1961)

படம் வங்க மொழியில் - ஆங்கில ச்ப் டைட்டில்களுடன் - ஓடும் நேரம் : 125 நிமிடங்கள்
இடம் : கஸ்தூரி சீனிவாஸன் அரங்கம் . பீளமேடு , கோவை.
தொடர்புக்கு : konangal@gmail.com
அனுமதி இலவசம்.
நேரம் : 17 06 2007 , ஞாயிறு காலை 9.45 மணி முதல் மாலை 6.30 மணி வரை
இருவேளை தேநீர் மற்றும் மதிய உணவுக்கு நன்கொடை ரூ.50 .
உங்களால் முடிந்த அளவு நன்கொடை கொடுத்து கோணங்களின் முயற்சிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மதிய உணவு வேண்டுவோர் இந்த எண்களில் தொடர்புகொண்டு முன்பே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். 9894871105 , 94430 39630
No comments:
Post a Comment