Thursday, 17 February 2011

மைக்கெலேஞ்செலோ அந்தோனியோனியின் ‘லாவென்ச்சுரா’ – 20 பெப்ருவரி திரையிடல்


லாவென்ச்சுரா

இயக்கம் - மைக்கெலேஞ்செலோ அந்தோனியோனி
வருடம் : 1960

இலக்கியத் தரத்துக்கு திரைப்படக்கலையை உயர்த்திய முக்கியமான திரைப்படங்களில் ’லாவென்ச்சுரா’ ஒன்று.



Monday, 31 January 2011

யெல்லா - கிரிஸ்டியன் பெட்ஸோல்ட்- பெப்ருவரி 6, 2011




யெல்லா
இயக்கம் - கிரிஸ்டியன் பெட்ஸோல்ட் , ஜெர்மனி
ஓடும் நேரம் -89 நிமிடங்கள்,
06/02/2011 -
மாலை 5.45 - பெர்க்ஸ் மினி கலை அரங்கம்.


ஜெர்மனியின் குறிப்பிடத்தக்க இளம தலைமுறை இயக்குநர்களில் ஒருவரான கிரிஸ்டியன் பெட்ஸோல்ட் 2007 இல் இயக்கி அளித்த திரைப்படம் யெல்லா - Yella. ஜெர்மனியின் அரசியலும், வாழ்க்கையும் ஒரு திகில் கதை வழியே அற்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது.


இக்கதையைத் தொடர்ந்து இயக்குநரின் நேர்காணலைக் காணுவது அவசியம். படம் பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். இவரது படங்களில் வழக்கமாக நடிக்கும் நீனா ஹாஸ் கதாநாயகியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு...

.

Monday, 24 January 2011

29 ஜனவரி 2011; பிக்காசோ - ஓவிய ஆவணப்பட திரையிடல்



ஓவிய ஆவணப்பட திரையிடல்

பிக்காசோ

29 ஜனவரி 2011; மாலை 5.45 மணி
காண்டெம்ப்ளேட் ஓவியக் கூடம்
ராஜஷ்ரீ ஃபோர்ட் வளாகம்
அவநாசி சாலை
பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரி எதிர்புறம்.


இரு ஆவணப்படங்கள்

1. குவெர்னிகா (1950) இயக்கம் ஆலன் ரெஸ்னே


2. நவீன மேதைகள் - பிக்காசோ

Friday, 10 December 2010

பிரமிள் நூலகம்

பிரமிள் நூலகம்

தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்பட மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்காக விரைவில் தனது அலுவலகத்தில் நூலகம் ஒன்றை அமைக்கவிருக்கிறது. இந்த நூலகத்தின் மூலம் விரிவானதொரு வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தோறும் "வாசிப்பு அனுபவத்தை" ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏதாவது கிராமத்தில் பிரமிள் நூலக வாசகர் வட்ட வாசிப்பு நிகழ்வுகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் பரவலான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் எழுத்தாளர்கள் பற்றி கிராம மக்களும், மாணவர்களும் அறிந்துக் கொள்ள இந்த நிகழ்வுகள் உதவும். தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிளின் பெயரில் இயங்கவிருக்கும் இந்த நூலகத்திற்காக நீங்களும் உங்களிடம் உள்ள புத்தகங்களை கொடுத்து உதவலாம், அது ஒரே ஒரு புத்தகமாக இருந்தாலும் சரி. புத்தகங்கள் தர விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236..

வெளிநாடுகளில் வசிப்பவர்களும் புத்தகங்கள் கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com

http://www.thamizhstudio.com/